சென்னை:
அரசு பள்ளியில் படித்து, ‘நீட்’ தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் ததையல் தொழிலாளி மகள் ஜிவிதா. அவர் விரும்பியபடி அவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
சென்னை பல்லாவரம்அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஜிவிதா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவரான ஜிவிதா, மருத்துவம் படிக்க விரும்பி கடுமையாக உழைத்து வந்தார்.

இவர் தந்தை அந்த பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறது. இவருக்கு ஜிவிதாவுடன் மேலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது 3 குழந்தைகளும் அரசு பள்யிலேயே படித்து வருகின்றன.
ஜீவிதா 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலும் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்தார். மருத்துவராக ஆசைப்பட்ட ஜிவிதா மேல்நிலைப் வகுப்பில் கடுமையாக உழைத்தார். பிளஸ்2 படிக்கும்போதே மருத்துவ நுழைவுத்தேர்வுகான பயிற்சியியும் பெற்று வந்தார். தனியார் பயிற்சி நிறுவனத்துக்கு சென்று படிக்க வசதியில்லாத நிலையில், சில நண்பர்கள் உதவியுட படித்து நீட் தேர்வை எதிர் கொண்டார்.
நாடு முழுவதும கடந்த மே 5ந்தேதி நீட் தேர்வு நடைபெற்றது. ஜிவிதாவும் நீட் தேர்வை எழுதினார். இந்த தேர்வுக்கான முடிவு நேற்று முன்தினம் (5ந்தேதி) வெளியானது. இதில், மொத்த மதிப்பெண்ணான 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
அகில இந்திய அளவில் 6,678-வது இடத்தையும், ஓபிசி பிரிவில் 2,318-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஜிவிதாவின் மருத்துவராகவும் ஆசை நிறைவேற பத்திரிகை.காம் இணையதளமும், வாசகர்களும் வாழ்த்துக்கிறார்கள்….
[youtube-feed feed=1]