ஓவல்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பெற்ற வெற்றியால் இந்திய வீரர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்றும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

அவர் கூறியுள்ளதாவது, “தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். இந்தியப் பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மென்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இந்த வெற்றியால் எல்லாம் சரியாகிவிட்டது என்று மெத்தனமாக இருந்துவிடுவது ஆபத்தானது.

எதிர்வரும் ஜுன் 9ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஆட்டம் மிகவும் சவாலானது. அந்த அணியினர் தன்னம்பிக்கையும் ஒருங்கிணைப்பும் கொண்டு விளையாடுபவர்கள். எனவே, எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்” என்று தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 5 விக்கெட்டுகளை மிக விரைவிலேயே இழந்தபோதும், அடுத்து நின்று ஆடி 288 ரன்கள் வரை எடுத்து சாதித்தது ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.