சென்னை:

மிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்-4 தேர்வுக்கு வரும் 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு வெளி யாகியுள்ளது. வரும் ஜூன் 14ம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி இணையதளததின் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து, ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:

விஏஒ (VAO). ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant). பில் கலெக்டர் (Bill Collector). தட்டச்சர் (Typist)
போன்ற பல்வேறு இளநிலை ஊழியர்கள் பணிகளுக்கு குரூப்-4 தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

 தேர்வுக்கான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:  14.06.2019

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 14.07.2019

தேர்வு நடைபெறும் தேதி:  பின்னர் அறிவிக்கப்படும்

கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்ற இந்த தேர்வு பற்றிய பல்வேறு தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இளையதள முகவரிகள்:

http://www.tnpsc.gov.in அல்லது

http://www.tnpsc.exams.net  அல்லது

http://www.tnpsc.exams.in

www.tnpsc.exams.in

என்ற இணையதளங்களில் 14.06.2019 ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.