சென்னை:

மிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு இன்று (ஜூன் 7) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்பட சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமி யோபதி போன்ற அனைத்து வகையின மருத்துவ படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த நிலையில்,  நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.

தேர்வு முடிவுகள்  கடந்த (ஜூன்) 5ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாது.  இதில் தமிழகத்தில் 48.57 சத விகிதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ- மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரிகளில் இலவசமாக படிக்க முடியும்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்  படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று வெளியாகி உள்ளது. இன்றுமுதல்  ஜூன் 20 கடைசி தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த விண்ணப்ப படிவம் சுகாதாரத்துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்து பின்னர் பூர்த்தி செய்து சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

https://tnmedicalonline.xyz/Default.aspx?ID=PRyxQzzugjUK7KqMgT4fbCI/L/NABDwijg7NwIclT8U=

விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் வருகிற 20-ந்தேதி மாலைக்குள் சென்னைக்கு வந்து சேர வேண்டும்.