புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த பங்களாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியேறுகிறார்.
கடந்த 14 ஆண்டுகள் இதே பங்களாவில் வாஜ்பாய் வசித்தார். அவர் மறைந்த பிறகு, அவரது உறவினர்கள் அந்த பங்களாவை காலி செய்தனர்.
இந்த பங்களா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த பங்களாவுக்கு வந்த அமித்ஷா, சில மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தினார். அதன்படி, பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
இந்த பங்களாவை வாஜ்பாய் நினைவு இல்லமாக மாற்றும் யோசனை மோடி அரசுக்கு இருந்தது. அதன்பிறகு அந்த முடிவு கைவிடப்பட்டது.