லாஸ் வேகாஸ்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கு வாபஸ் பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார் சம்பந்தப்பட்ட பெண்ணான மயோர்காவின் வழக்கறிஞர்.
பாலியல் முறைகேட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டுவிட்டது என்று வெளியான தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளார் அவர்.
கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ஹோட்டலில் வைத்து ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதே அந்தப் பெண் அளித்த புகார்.
“நாங்கள் ஃபெடரல் நீதிமன்றத்தில் ஒருமைத்தன்மையை சமர்ப்பித்தோம். ஏனெனில், ஃபெடர்ல் நீதிமன்ற விதிமுறைகளின்படி, வெளிநாட்டவர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருமைத்தன்மையை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, நாங்கள் இடத்தைதான் மாற்றியுள்ளோமே தவிர, நாங்கள் கொடுத்தப் புகாரில் எந்த மாற்றமும் இல்லை” என்றார் மயோர்காவின் வழக்கறிஞர்.
ஆனால், தன் மீதான பாலியல் புகாரை 34 வயதான ரொனால்டோ கடுமையாக மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.