சென்னை: துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கடந்த மே 22ம் தேதி சென்னையில் துவக்கி வைத்த ‘மர ஆம்புலன்ஸ்’, தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சுற்றி வருகிறது.
மரங்களை இடம்பெயர்த்து நடுதல், நோய்வாய்ப்பட்ட மரங்களுக்கு சிகிச்சையளித்தல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணாக்கர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை இந்த மர ஆம்புலன்ஸில் சேவையாற்றும் தன்னார்வலர்கள் மேற்கொள்கிறார்கள்.
இந்த ஆம்புலன்ஸ் தனது இறுதி இலக்காக இந்திய தலைநகரம் டெல்லியை அடையும். அந்த இலக்கை இன்னும் 2 மாதங்கள் கழித்தே அடையும்.
அந்த இலக்கை அடையும் பயணத்தில், தனது சேவைகள் மற்றும் பிறருக்கான விழிப்புணர்வு பணிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டே பயணம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.