டில்லி

மெரிக்க தனியார் நிறுவனம் நிலவுக்கு அனுப்ப உள்ள முதல் விண்கலத்தை இந்தியா வடிவமைக்க உள்ளது.

நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் அமெரிக்காவை சேர்ந்த ஆம்ஸ்டிராங் ஆவார்  கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி நடந்த இந்த சாதனையை தொடர்ந்து அமெரிக்கா நிலவில் பல சோதனைகளை நிகழ்த்தி உள்ளது.   அவ்வகையில் இந்தியா கடந்த 2016 ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை நிலவுக்க் அனுப்பியது.

வரும் 2021 ஆம் வருடம் நாசா மையம் தனியார் நிறுவனங்கள் மூலம் விஞ்ஞான சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.   இதற்காக நாசா 250 மில்லியன் டாலர்கள் செலவழிக்க உள்ளது.  இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1735 கோடி ஆகும்.   இந்த தனியார் சோதனை நிறுவனங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள விவரம் குறித்து சேகரித்து ஆய்வு நடத்த உள்ளன.

இதற்காக ஆஸ்டிரோபோடிக், இண்டூடிவ் மெஷின்ஸ்,  ஆர்பிட் பியாண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.   இவைகளில் ஆர்பிட் பியாண்ட் நிறுவனம் தனது விண்கலத்தை 2020 செப்டம்பரிலும் மற்றவை 2021 லும் செலுத்த உள்ளன.   இந்த ஆர்பிட் பியாண்ட் நிறுவனத்தின் விண்கலத்தை டீம்இண்டஸ் இன்னும் இந்திய நிறுவனம் வடிவமைக்க உள்ளது.

டீம்இண்டஸ் நிறுவனம் கடந்த 2010 ஆம் வருடம் நிலவுக்கு ஒரு ரோபோவை அனுப்பும் போட்டியில் வெற்றி பெற்ற நிறுவனம் ஆகும்   இதில் கலந்துக் கொண்ட பல நிறுவனங்களால் குறித்த கெடுவுக்குள் முடிக்க இயலாததால் அந்நிறுவனங்கள் போட்டியில் இருந்து விலகின.  இஸ்ரேல் மற்றும் இந்தியா மட்டுமே கலந்துக் கொண்டன. அதில் டீம்இண்டஸ் நிறுவனம் வெற்றி பெற்றது