சென்னை:

றைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் கடந்த 3ந்தேதி தமிழகம் முழுவதும் அணுசரிக்கப்பட்டு வந்த நிலையில், கலைஞரின் நிழல் என்று திமுகவினரால் அன்போடு அழைக்கப்படும்  அவரின் உதவியாளர் நித்யா, கருணாநிதி சமாதியில் படுத்து இளைப்பாறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதியை சந்திக்க வேண்டுமென்றால், அவரது குடும்பத்தினர் உள்பட அனைத்து தரப்பின ரும், நித்யாவையே முதலில் தொடர்பு கொள்வது வழக்கம். அவரின் கண்ணசைவை தொடர்ந்தே  கலைஞரை சநதிப்பது வழக்கம்.

முதலில் நித்யாவைச் சந்தித்து  `தலைவர் என்ன மன நிலையில் உள்ளார்’ எனக் கேட்டு அறிந்த பின்னர்தான் அவரிடம் சென்று பேசுவார்களாம். குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட கருணாநிதிக்கு அருகிலேயே அவரின் நிழலாக இருந்தவர் நித்யா.

கருணாநிதி காலையில் எழுந்ததிலிருந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பெர்சனல் உதவிகள் என இரவு தூங்கும் வரை அவருக்கு அருகிலேயே இருந்து அவரை கவனித்துக் கொள்பவர் நித்யா.

இந்த நிலையில், கருணாநிதி பிறந்த நாளன்று இரவு கருணாநிதி சமாதியில் நித்யா படுத்து உறங்கிய புகைப்படங்கள் வைரலானது. இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வரும் நிலையில், தான் ஏன் கருணாநிதி சமாதியில் இருந்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.

கடந்த 2 நாட்களாக கருணாநிதி சமாதி வந்து செல்வதாக தெரிவித்தவர், கருணாநிதி பிறந்த நாளின்போது, அவரது நினைவிடத்துக்குச் செல்லும் போது அங்கு யாரும் இல்லை. எனக்கும்  அங்கு படுத்திருக்க வேண்டும் எனத் தோன்றியது அதன் காரணமாக அவரது சமாதியில் படுத்திருந்தேன்… வேறு ஒன்றும் இல்லை என்று கூறினார்.