சென்னை:
தமிழக அரசின் நலத்திட்டங்களின் நிதியுதவி பெற வருமான வரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி இதுவரை ஏழை பெண்கள் அரசின் நிதிஉதவி பெற வருமான வரம்பு ரூ.24 ஆயிரம் இருந்த நிலையில், தற்போது 72 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக அரசின் சில திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ 24 ஆயிரத்தில் இருந்து ரூ 72 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக அரசின் சார்பின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நலத்துறையின் கீழ் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவச பாடநூல், குறிப்பேடுகள் வழங்கும் திட்டத்திற் கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ 72 ஆயிரமாக உயர்த்தி உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘ஏற்கனவே தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கங்களின் பலனை பெற வருமான வரம்பு ரூ.24 ஆயிரமாக நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நலத்திட்டத்தின் பலன்களை பலர் அடைய முடியாத நிலை நீடித்தது.
இந்த நிலையில், அரசின் நிதிஉதவி பெறும் நலத்திட்டங்களில் ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், மூன்றாம் பாலினத்தவர் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டத்துக்கும் வருமான உச்சவரம்பு ரூ. 72 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.