சென்னை:

பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம்  2ந்தேதி தொடங்கி நேற்றுடன் (மே 31) முடிவடைந்தது., இதுவரை 1,33,116  பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வி ஆணையம் தெரிவித்து  உள்ளது. இது கடந்த ஆண்டை விட30 ஆயிரம் குறைவு என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாண வர்கள்  இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்து இருந்தது.

கிராமப்புற மாணவ மாணவிகள்ளும்  விண்ணப்பிக்கும் வகையில்  தமிழகம் முழுவதும்  42  இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பதிவு நடைபெற்று வந்தது. நேற்றுடன் (மே 31ந்தேதி) ஆன்லைன் விண்ணப்பம் முடிவடைந்தது.

பொறியியல் படிப்பில் சேர முதல் நாளில் மட்டும் 15,000 மாணவ மாணவிகள்  விண்ணப்பித் திருந்த நிலையில், இதுவரை 1 லட்சத்து 11ஆயிரத்து 116  மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு 1லட்சத்துக்கு63ஆயிம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த  ஆண்டு 1,33,116 பேர்  மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை 30ஆயிரம் விட குறைவு என்றும்,  நாட்டில் பொறியியல் படிப்பின்மீதான மோகம் குறைந்து வருவதையே இது காட்டுவதாக மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து  ஜூன் 6 ம் தேதி முதல் 11 தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூன் 17 ஆம் தேதி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பிறகு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.