லண்டன்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் நோட்டிங்காமில் டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
50 ஓவர்களை கொண்ட ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று ( மே 30 ) தொடங்கி ஜூலை 14ந்தேதி வரை நடைபெறுகிறது.
நேற்று முதல்ஆட்டம் முடிவடைந்த நிலையில், இன்று 2வது நாள் லீக் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் & பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வெஸ்ட வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை கைப்பற்றியது .இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி மட்டையுடன் களமிறங்கியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் இறங்கிய நிலையில், இமாம்உல்ஹக் 11 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்காட்ரெல் பந்தில் ஷபி கோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பந்து வீசிய ரஸ்ஸல் தனது முதல் ஓவரிலேயே பவுன்சர் பந்தின் மூலம் ஃபகார் ஸமானை 22 ரன்களில் வெளியேற்றினார். பந்து ஃபகாரின் ஹெல்மெட்டில் பட்டு ஸ்டம்பின் மேல் விழுந்தது. மற்றொரு ஷார்ட் பந்தின் மூலம் ஹாரிஸ் சொஹைலை 8 ரன்களில் வெளியேற்றி னார் ரஸ்ஸல்.குறுகிய நேரத்தில் 3 விக்கெட் வீழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெஸ்ட் இன்டிஸ் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் பதற்றத்துடன் தடுமாறினர்.
ஓரளவுக்க தாக்குப் பிடித்து ஆடிவந்த பாபர் அஸாம் 33 பந்தில் 22 ரன்களில் எடுத்த நிலையில், ஒசோனே தாமஸ் பந்தகுக ஷாய் ஹோப்பின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வெஸ்ஸ் இன்டிஸ் பவுலர்கள் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் வீரர்களை தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், 17-வது ஓவரை வீசி ஹோல்டர் களத்துக்கு வந்தார்.
அவரது பந்தில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபாஸ் அஹமது, இமாத் வாசிம் ஆகியோர் தங்களது விக்கெட்டுக்களை பரிகொடுத்து வெளியேறினர். தொடர்ந்து அடுத்த ஓவரில் ஷதாப் கான் தாமஸ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த பரபரப்பான சூழலில், ஹசன் அலியும் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் வெளியேற பாகிஸ்தான் அணி மேலும் தடுமாறியது.
2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த முஹமது ஹஃபீஸ் 16 ரன்களில் தாமஸின் ஷார்ட் பந்தில் ஆட்டமிழக்க 86 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
தொடர்ந்து அடுத்த ஓவரில் மீண்டும் ஹோல்டர் பந்த வீச, வேறு வழியின்றி வஹாப் ரியாஸ் அதிரடியாக ஆடத்தொடங்கினார். அவரது முயற்சிக்கு பலன் கிட்டிய நிலையில், பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது.
வஹாப் ரியாஸ் ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வகாப் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த ஓவரில் அவரை வஹாப் வீழ்த்தினார் தாமஸ்.
இதனால் பாகிஸ்தான் அணி, 21.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மேற்கு இந்திய தீவு அணியில் ஒஷானே தாமஸ் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும் காட்ரெல் 1 விக்கெட்டையும் வீழ்த்தி உலக கோப்பையில் விளையாடும் மற்ற அணியினருக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து 106 ரன் இலக்குடன் பாகிஸ்தான் அணி பந்துவீச மேற்கு இந்திய அணி மட்டையுடன் களத்தில் விளையாடி வருகிறது.