மெரிக்காவின் பிரபல மின்வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சீனாவில் உள்ள தனது ஆலையில் தயாரிக்கும் மாடல் 3 மின் வாகனங்களுக்கான முன்பதிவை ஆரம்பித்தது. ஆரம்பித்த 3 நிமிடங்களின் மொத்த முன்பதிவும் முடிந்தது.

சீனா புதிய எரிசக்தி வாகனங்களுக்கான அந்நிய சொத்துரிமை மீது  கட்டுப்பாடுகளை தளர்த்தியது, முழுமையாக டெஸ்லா நிறுவனத்தின் தன் மின் வாகன தயாரிப்புக்கான உற்பத்தி மையத்தில் ஷாங்காயில் நிறுவியது.

இந்த திட்டம்தான்  முழுமையான அந்நிய முதலீட்டில் சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திட்டம். டெஸ்லா ஜிகாபேக்டரி  கார் உற்பத்தி தொழிற்சாலை ஜனவரி 7ம் தேதில் முதல் தனது கட்டு மானப் பணியை துவங்கியது. இப்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ள டெஸ்லா மாடல் 3  கார்கள் 6 முதல் 10வது மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனம் எலான் மஸ், சீனாவில் உள்ள தொழிற்சாலையில்  இவ்வருட இறுதிக்குள் வாரத்துக்கு 1000 முதல் 2000 மாடல் 3 கார்கள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

-செல்வமுரளி