பியாங்க்யோங்

மெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தைக்கான தூதுவரை வட கொரியா தூக்கிலுட்டுள்ளது.

 

கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகரான ஹனோயில்  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் இருவரும் கலந்துக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.   அப்போது கிம் பொருளாதார தடைகளை முழுவதுமாக விலக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி கொள்ள பல நிபந்தனைகள் விதித்தார்.

அமெரிக்க அதிபர் இதனால் அதிருப்தி அடைந்தார்.  அதனால்  இந்த பேச்சுவார்த்தை முறிந்தது.   அதன்  பிறகு வட கொரியா பல ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தியது.   இது அமெரிக்க அதிபருக்கு மேலும் அதிருப்திய அளித்தது.   வட கொரியா இம்மாத தொடக்கத்தில் இரு ஏவுகணை சோதனை  நிகழ்த்தியதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அமெரிக்கா உடனான பேச்சு பேச்சு வார்த்தைகளுக்கு தூதராக கிம் ஹியூக் சோல் பணி ஆற்றினார்.   இந்த பேச்சு வார்த்தைகள் தோல்விக்கு பிறகு அவரைப் பற்றிய எந்த செய்தியும் வெளியாகவில்லை.   இந்நிலையில் அவரை வட கொரிய அரசு தூக்கிலிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவருடன் மேலும் நான்கு வெளியுறவுத்துறை அமைச்சரக அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டுள்ளதாக வட கொரிய செய்தித் தாள்கள் தெரிவிக்கின்றன.

இது வடகொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.