சென்னை:
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டாரங் களில் தண்ணீர் லாரிகள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், கடந்த 27ந்தேதி தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. பின்னர் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை விட்டதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளனர்.
இதுவரை 12ஆயிரம் லிட்டர் டேங்கர் தண்ணீர் விலை ரூ.2 ஆயிரமாக இருந்த நிலையில், புதிய கட்டணமாக ரூ.3500 ஆக உயர்த்தி உள்ளது.
24ஆயிரம் லிட்டர் டேங்கர் தண்ணீர் விலை ரூ.5ஆயிரமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இயங்கும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் ஓடுவது குறிப்பிடத்தக்கது.