2019ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்கும் நிலையில் பிரபல வலைதளமான கூகுள் அனிமேஷன் டூடுளை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12 ஆவது உலகக் கோப்பை போட்டி இன்று (30ம் தேதி) இங்கிலாந்தில் தொடங்குகிறது. போட்டியை காண ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய முதல்போட்டி இங்கிலாந்து அணிக்கும் தென்ஆப்பிரிக்கா அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.
இதையொட்டி கூகுள் இணைதளம் வண்ணமிகு அனிமேஷனுடன் டூடுள் வெளியிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel