மும்பை: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில், முதன்முதலாக வர்ணனையாளராக மாறவுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இந்த ஆட்டம் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும், போட்டிக்கு முன்னர் நடைபெறும் ஃபிலிப்ஸ் ஹியூ கிரிக்கெட் லைவ் ஷோவிலும் கலந்துகொள்ளவுள்ளார். இதில், டெண்டுல்கருடன் விளையாடிய சில முன்னாள் வீரர்களும் பங்குபெறவுள்ளனர்.

உலகிலேயே மொத்தம் 6 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய சாதனையை டெண்டுல்கரே வைத்துள்ளார். மேலும், அத்தனை தொடர்களிலும் சேர்த்து மொத்தமாக 2,278 ரன்களையும் அடித்துள்ளார்.

ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த சாதனையும் அவரிடமே உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் ஆடி மொத்தமாக 673 ரன்களை குவித்தார்.

வரும் ஜுன் மாதம் 5ம் தேதி நடைபெறும் தனது முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணியை சந்திக்கவுள்ளது இந்தியா.