டில்லி:

த்திய அமைச்சரவையில் தொடர விருப்பம் இல்லை  என்று  பிரதமர் நரேந்திர மோடிக்கு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடிதம் எழுதி இருந்த நிலையில், இன்று திடீரென பிரதமர் மோடி ஜெட்லி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பாஜக ஆட்சியின்போது மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் நிதி அமைச்ச ராக பணியாற்றி வந்தவர் அருண்ஜெட்லிசிறுநீரக கோளாறு ஏற்பட்டதால், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து தீவிர பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், 17வது மக்களவைக்கான தேர்தலிலும் மீண்டும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பிரதமராக மோடியே 2வது முறை பதவி ஏற்க உள்ளது. அவரது தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பிற்பகல் பதவி ஏற்க உள்ளது.

இந்த நிலையில், தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அருண்ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.  இந்த நிலையில், அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசி வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.