டில்லி:
நடைபெற்று முடிந்த 17வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் கலந்துகொள்ள முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமராக மோடி 2வது முறையாக நாளை பதவி ஏற்க உள்ளார். அவரது பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படிமேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மம்தாவுக்கும், மோடிக்கும் இடையே தேர்தல் பிரசாரத்தின்போது காரசார விவாதங்கள் நடைபெற்று வந்தாலும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மற்ற மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசித்தாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று முடிவு செய்து உள்ளதாகவும் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.