நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தனது பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள நட்பு அடிப்படையில் ரஜினிகாந்துக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.