சென்னை:
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் திமுக 14 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும்முடிவடைந்துள்ளன. இந்த தொகுதிகளில் வெற்றி பெறப்போவது யார் என்று பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்தியா டுடே இன்று வெளியிட்டுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பில், திமுக 14 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும் 5 இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவுவதாகவும் தெரிவித்து உள்ளது.