புதுடெல்லி:
அதிகாரம் என்பது விஷம், அதனிடம் தள்ளியே இருக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அவுட்லுக் இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில், முஸ்லிம்கள் பற்றி காங்கிரஸ் பேசவில்லை, காங்கிரஸ் பாஜகவின் பி டீஸ் என்பது எல்லாம் தவறான கருத்து. சிறுபான்மையினத்தவராகட்டும், ஒவ்வொரு இந்திய குடிமகனாகட்டும் என் நிலை தெளிவாக உள்ளது.
ஒவ்வொரு இந்தியரின் சாதி,மதம், பாலினம், மாநிலம், மொழி பாதுகாக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தைப் பற்றி கனவு காணவும், கருத்தை வெளியிடவும் அனைவருக்கு உரிமை உண்டு.
நாங்கள் பாஜகவின் பி டீம் என்றால், எங்களை மோடி ஏன் தாக்கிப் பேசுகிறார்.
இந்தியாவை விட தான் பெரிய ஆள் என்று மோடி நினைக்கிறார். அவருக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டோம்.
அவரை விட இந்திய மக்கள் பெரியவர்கள் என்பதை மோடிக்கு காட்டிவிட்டோம்.
அமைப்பு ரீதியாக இந்தியாவுடன் ஆழ்ந்த தொடர்புடைய கட்சி காங்கிரஸ். எங்கள் எதிரிகள் கூறும் கருத்துகளையும் காது கொடுத்து கேட்போம்.
ஆனால், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் யார் சொல்வதையும் கேட்பதில்லை. எல்லாவற்றுக்கும் தங்களுக்கு விடை தெரியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் உருவானதே மோடியால் தான்.
2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறினார்.
இதிலிருந்து உண்மையை கண்டறிந்தோம். அதாவது, அது ரூ.15 லட்சம் அல்ல. 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் ஏழைகளுக்கு ரூ.3.6 லட்சம் கொடுக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டோம்.
இந்த திட்டம் ஏழைக்கானது மட்டுமல்ல. இது இந்திய பொருளாதாரத்தையும் தாங்கிப் பிடிக்கும்.
சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரை, மக்களின் உணர்வை மதிக்கின்றேன்.
இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டியிருக்கின்றோம். என்ன நடக்கும் என்பதை மே 23-ம் தேதி மக்கள் தீர்மானிப்பார்கள்.
எந்த முடிவாக இருந்தாலும் எதிர்கட்சிகள் ஏற்போம். நாங்கள் இணைந்து வலுவான அரசை அமைப்போம்.
மோடியையும் பாஜகவையும் தோற்கடிப்பதே எங்கள் லட்சியம்.
ரஃபேல் பேரத்தில் மோடி ஊழல் செய்துள்ளார் என்பதை 68% மக்கள் நம்புகிறார்கள்.
மாயாவதி குறிப்பிட்ட பிரிவு மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். சரத்பவார் மகாராஷ்ட்ர மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார்.
அவர்கள் பிராந்தியத் தலைவர்கள் மட்டுமல்ல. அவர்கள் இந்தியாவின் குரலை வெளிப்படுத்துகின்றனர்.
என் தந்தை கொல்லப்பட்டதால் கோபமானேன். அந்த கோபத்தை எப்போதும் சுமந்து கொண்டே இருந்தேன். ஒருநாள் உணர்ந்தேன். அப்போது முதல் என் தலையில் சுமந்த அந்த விசயத்தை கழற்றி எறிந்தேன்.
அதிகாரம் என்பது விஷம். அதனிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்றார்.