புதுடெல்லி:
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு தகவல்களை பறிமாறிய குற்றச்சாட்டின்பேரில், மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள காலாட்படை பட்டாலியனில், 26 வயது ராணுவ வீரர் கிளார்க்காக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் ராணுவ ரகசியங்களை அந்த பெண்ணுக்கு தெரிவித்து வந்துள்ளார்.
ராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸார் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் கையும் களவுமாக பிடிபட்டு, கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.