சென்னை:
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல அரசு தேர்வுகள், துறை தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வும், பிஎட் தேர்வு தேதியும் ஒரே நாளில் உள்ளதால், தேர்வை எதிர்கொள்ள மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8 மற்றும் 9ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் பி.எட். இறுதியாண்டுத் தேர்வும் ஜூன் 8ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இரு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெரும் குழப்பத்தில் உளன்று வருகின்றனர். ஒரே நாளில் இரு தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்று கேள்வி எழுப்பியுள்ளவர்கள், பிஎட் தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.