
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நாயகியான அனுஷ்கா 2015 ஆண்டு ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிப்பதற்கு ஏராளமாக எடை கூடினார்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண், தன்னுடைய உடல் எடையைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள்தான் இந்தப் படம். இது தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் ரிலீஸானது.
அனுஷ்கா யோகா டீச்சராக இருந்தும் கூட ஏற்றிய எடையை குறைக்க முடியவில்லை.
இந்நிலையில் நியூட்ரிஷியன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் படிப்படியாகத் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார் அவரின் எடைக் குறைப்பு அனுபவத்தைப் பற்றிப் புத்தகமும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை, பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel