சென்னை:

சென்னை கோயம்பேடு, மாதவரம், அசோக்நகர் போன்ற பகுதிகளில் எத்திலின் ரசாயணம் மூலம்  பழுக்க வைக்கப்பட்ட சுமார் நாலரை டன் மாம்பழகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

முன்காலத்தில் மாம்பழங்கள் பழுக்க வைக்க புகையை கொண்டு ஊத்தம் போடுவது வழக்கம். ஆனால், நவீன காலங்களில் பழங்களை பழுக்க வைக்க ரசாயணங்கள் உபயோகப்டுத்தப்பட்டு வருகின்றன. சில ஆண்டு காலமாக கால்சியம் கார்பைடு’ ரசாயன கல் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்ட நிலையில், அதற்கு அரசு தடைவிதித்து. இந்த நிலையில், தற்போது  எத்திலின் என ரசாயணம் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், தர்மபுரி, திண்டுக்கல், வேலுார் உள்ளிட்ட, பல மாவட்டங்களில், வர்த்தக ரீதியாக மாம்பழ உற்பத்தி நடக்கிறது. . இந்த மாங்காய், இயற்கையாக பழமாக மாற வேண்டுமானால், ஒரு வார கால அவகாசம் தேவைப்படும். இயற்கையாக கனியும் பழங்கள், மிகவும் ருசியாகவும், உடல் நலத்துக்கு பாதிப்பு இல்லாததாக இருக்கும்.

ஆனால் தற்போது வியாபார நோக்கில் மாங்காய்களை பறித்து அதை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள்.

பழங்களைப் பழுக்கச் செய்ய எத்திலின் பாக்கெட்டுகளை பயன்படுத்த உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரைத்தது. ஆனால் பழப் பெட்டிகளுக்குள் எத்திலின் பாக்கெட்டுகளை நேரடியாக வைக்கக் கூடாது என்றும் வேறு டப்பாக்களுக்குள் வைத்து வைக்க வேண்டும் என்றும். பழங்கள் பழுக்க வைக்க, 100 பி.பி.எம்., எத்திலின் வாயு பயன்படுத்தலாம் என்றும், உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால், எத்திலின் பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. ஒவ்வொரு முறையும் வியாபாரிகளுக்கு, இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், அவர்கள் விதிமுறையை கடைபிடிப்பதில்லை என்று அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பழங்களை சாப்பிடுவதால், அதிகளவில் உடல்நல பாதிப்பு ஏற்படும் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், நமது வியாபாரிகள் அதை மதிக்காமல் நேரடியாக பழங்களுக்குள்ளே எத்திலின் பாக்கெட்டுகளை போட்டும், பழங்கள் மீது எத்திலின் ரசாயண கலவையை ஊற்றியும் பழுக்க வைப்பதாக தெரிகிறது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கோயம்பேடு உள்பட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சுமார்  4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

[youtube-feed feed=1]