டில்லி
டில்லி நகரில் சிவில் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்தார்.
இன்று காலை முதல் மக்களவை தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவு 7 மாநிலங்களிலுள்ள 59 மக்களவை தொகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் டில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் டில்லியில் உள்ள சிவில் லேன் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துள்ளார்.