டில்லி

ரும் 23 அன்று நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சென்ற மாதம் 11 ஆம் தேதி முதல் இந்த மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அடுதத இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் நாடெங்கும் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன.

கடந்த மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவுகள் நடந்தன. அத்துடன் தமிழக சட்டப்பேரவை 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றன. அன்றைய தேர்தலில் நடந்த குழறுபடிகளால் 11 வாக்குச்சாவடிகளில் வரும் 19 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி,சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளிலும் அன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த வாக்குகளும் 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்த வாக்கு எண்ணிக்கை குறிப்பான ஏற்பாடுகள்  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்ற மாநில தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவருடன் மற்ற தேர்தல் ஆணையர்களான அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை சுமார் 2 மணி நேரம் நடந்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு, மற்றும் அதிகாரிகள் பாலாஜி, ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் நடைபெற உள்ள வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் உள்ளிட்டவைகளை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப்படை வீரர்கள் வர உள்ளதாக சத்தியப்பிரதா சாகு கூறி உள்ளார்.