சென்னை: 

மிழகம் முழுவதும் அட்சய திருதியையொட்டி கடந்த 7 ந்தேதி  10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். இது வியப்பை  ஏற்படுத்தி உள்ளது. தக்கத்தின் மீதான மோகம் தமிழக பெண்களுக்கு குறைந்தபாடில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

கடந்த 7ந்தேதி நாடு முழுவதும் அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பொருட்கள் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அதற்கு தங்கம்தான் வாக்க வேண்டும் என்பது இல்லை. எந்தவொரு சிறு பொருள் வாங்கினாலும் போதுமானதே… ஆனால் நமது மக்கள்ன  தங்க வணிகர்களின்  ஆசையைத் தூண்டும் வியாபார ரீதியிலான விளம்பரங்களை கண்டு ஏமாந்து, அன்றைய தினம் தங்கம் வாங்கினால், தங்கள் வீடுகளில் தங்கம் குவியும் என்று கனவு கண்டு தங்கத்தை வாங்கி வருகின்றனர்.

இந்த அண்டு  அட்சய திருதியை அன்று சென்னை திநகர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள  நகைக்கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. அன்றைய தினம் ஏராளமான கடைகள் காலை 6 மணிக்கே திறந்து இரவு 12 மணிவரை தங்களது வியாபாரத்தை திறம்படி நடத்தி தங்களது கல்லாக்களை நிரப்பின.

இந்த நிலையில், அட்சயதிருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை ஆகி இருப்பதாக  தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது கடந்த ஆண்டை காட்டிலும்  40 சதவீதம் வரை அதிகம் என்றும், அதுபோல வெள்ளி பொருட்கள் விற்பனையும் வழக்கமான நாட்களை காட்டிலும் 5 மடங்கு உயர்ந்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.