இஸ்லாமியர்களின் புனிதமாதமான ரமலான் மாதம் தொடங்கியதை தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்அணியில் விளையாடும் இஸ்லாமிய வீரர்கள் சிலர் கடந்த சில நாட்களாக நோன்பு கடைபிடித்து வந்த நிலையில், இன்று இரவு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற உள்ள 2வது தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க வேண்டியதிருப்பதால், தங்களது நோன்பை முறித்துக்கொண்டுள்ளனர்.
இன்று விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிடல் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே 2வது தகுதிச் சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வரும் வெள்ளிக்கிழமை சிஎஸ்கே அணியுடன் மோதும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் வகையில், தனது நோன்பினை ஐதராபாத் அணியை சேர்ந்த இஸ்லாமிய வீரர்கள் உணவு உண்டு, தங்களது நோன்பை முறித்துக் கொண்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் டிவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.