
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தேஜ், தற்போது குடும்ப த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.
பனரோமிக் ஸ்டுடியோ (Panaromic Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ரீவைண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தேஜுக்கு ஜோடியாக சந்தனா ராகவேந்திரா நடிக்கிறார்.
பிரேம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீ போர்ட் பிளேயராக பணியாற்றிய சபேஷ் சாலமோன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வினோத் பசவராஜ் எடிட்டிங் செய்ய, நாகேந்திர பிரசாத் பாடல்கள் எழுதுகிறார்.
மே 6 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்கிய ‘ரீவைண்ட்’ குழுவினர், மே 27 ஆம் தேதி முதல் ஜெர்மனியில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
[youtube-feed feed=1]