அஹமது இயக்கும் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.
‘கோமாளி ஜெயம் ரவியின் 24 ஆவது படமாகும். 25-வது படத்தை, லட்சுமண் இயக்குகிறார். ஜெயம் ரவி – லட்சுமண் கூட்டணியில் ஏற்கெனவே ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.
இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 26-வது படத்தை அஹமது இயக்குகிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர். இந்தப் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.