சென்னை:

தேர்தல் முடிவு வெளியான பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மே23ந்தேதி வெளியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி ஆட்சி கவிழும் என்றும், திமுக ஆதரவுடன் ஆட்சியை கவிழ்ப்போம் என்று டிடிவி தினகரன்  கட்சியின ரும்,  ஜூன் 3ந்தேதி திமுக ஆட்சி அமைக்கும் என ஸ்டாலினும் கூறி வருகின்றனர். இது தமிழகத் தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்றும், அடுத்து 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததற்கு திமுக தொடர்ந்தே வழக்கே காரணம் என்று குற்றம் சாட்டியவர் , தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகிறார்… நான் பொறுப்பேற்றுள்ள கடந்த இரண்டு ஆண்டுகளில், சுமார்  35,000- போராட்டங்கள்  தமிழகத்தில் நடைபெற்றதாகவும், இதற்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவர் ஸ்டாலின் என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் நடைபெறுகின்ற 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.தான்  மகத்தான வெற்றி பெறும் என்று கூறிய எடப்பாடி,  இந்த ஆட்சி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.