மொகாலி:
சிஎஸ்கே, கிங்ஸ்லெவன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுலின் மிரட்டலான ஆட்டத்தால், 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது பஞ்சாப்.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு மொகாலி பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து சென்னை அணி மட்டையுடன் களத்திற்குள் புகுந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளிசிஸ் (96), சுரேஷ் ரெய்னா (53) களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை அதிகரித்து வந்தது. டுபிளசிஸ் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 96 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷாம் கரன் பந்தில் போல்டானார். இடையில் களமிறங்கிய வாட்சன் 7 ரன்னிலும், அம்பதி ராயுடு 1 ரன்னிலும், காதல் ஜாதவ், பிராவோ 1 ரன்னிலும் வெளியேற, ரெய்னாவும் அவுட்டானார். அவர், 38 பந்தில், 2 சிக்சர், 5 பவுண்டர்களுடன் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாம் கரன் பந்து வீச்சில், ஷாமியின் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இறுதியாக தோனியும் பிராவோவும் களத்தில் இருந்த நிலையில், 20 ஓவரில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களத்தில் புகுந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் இறங்கினர். அவர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.
குறிப்பாக லோகேஷ் ராகுல் முதலில் இருந்தே தனது மிரட்டலான அதிரடியை தொடங்கினார், சாஹர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த அவர், ஹர்பஜன் சிங் வீசிய 2-வது ஓவரில் இரண்டு சிக்சர்கள் விளாசியும், 3வது ஓவரின் சாஹரின் பந்தை பவுண்டரிகளிக்கு விரட்டியும் மிரட்டினார். இதையடுத்து மீண்டும் ஹர்பஜன் பந்துவீசத் தொடங்கினார். ஆனால், ராகுல் அவரது பந்தையும் விளாசத் தொடங்கினார். இந்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் அடித்த நிலையில், 19 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. ஆட்டம் செம விறுவிறுப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து 7வது ஓவரின்போது இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்து கெயில் தனது அதிரடியை காட்டினார். அவர் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் அடித்தார். இந்த இணையை பிரிக்க முயற்சி செய்த சிஎஸ்கே பவுலர்கள் பகிரத பிரயத்தனம் செய்து வந்த நிலையில், 11வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் ராகுல், கெயில் தொடர்ச்சியாக வெளியேறினர்.
லேகேஷ் ராகுல் 36பந்தில் 5 சிக்சர், 7 பவுண்டரிகளிடன் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்பஜன் பந்தில் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதுபோல கிறிஸ் கெயிலும் 28 பந்தில் 2 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்தில் டிஷோரேயிடம் கேட்ச் கொடுத்தார்.
தொடர்ந்து இறங்கிய நிகோலஸ் பூரன் 36 ரன்களும், மயங்க் அகர்வால் 7 ரன்னிலும் வெளியேற மன்தீப் சிங்கம் சாம் குரனும் களத்தில் நின்றனர். இந்த நிலையில் 18 ஓவரில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பு 173 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக லோகேஷ் ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.