சென்னை:

3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை  எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த 2 அதிருப்தி எம்எல்ஏக்களும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கொறடா அளித்த புகாரின்பேரில், சபாநாயகர் தனபால், அவர்கள்மீது  கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நோட்டீசு அனுப்பினார்.

இதன் காரணமாக அவர்கள் தகுதிஇழப்பு செய்யப்படலாம் என்ற கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. சார்பில்  “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, உச்சநீதி மன்றத்திலும் திமுக முறையிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  3 அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில்  அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய 2 பேரும்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.