டில்லி
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளது.

தமிழக்த்தில் உள்ளாட்சி தேர்தல் வெகுநாட்களாக தள்ளிப் போடப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் சி ஆர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் விசாரணையை 4 வார காலம் தள்ளி வைத்தது.
அதை எதிர்த்து வழக்கறிஞர் ஜெய்சுகின் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கடந்த வருடம் டிசம்பர் மாதம் முறையிட்டார். ஆனால் அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு கூடுதல் அவகாசம் கேட்டது. இதுவே கடைசி அவகாசம் என எச்சரித்து உச்சநீதிமன்றம் மேலும் 4 வார அவகாசம் அளித்தது.
தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி ரமேஷ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழக தேர்தல் ஆணையம் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அந்த பிரமாண பத்திரத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத அவகாசத்தை தமிழக தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இச்சிலையி உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில் ”உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முன்பாக மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இன்னும் அரசுக்கு அளிகவில்லை. மேலும் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]