கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் மரணமடைந்த மாணவர் குறித்து விசாரிக்க, தொடர்புடைய பள்ளிக்குச் சென்ற இந்திய ஊடகவியலாளர் ஒருவர், இலங்கை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சித்திக் அகமது டேனிஷ் எனும் பெயருடைய இந்திய ஊடகவியலாளர், இலங்கை குண்டுவெடிப்புக்கு பிந்தைய நிலவரங்களைப் பதிவு செய்வதற்காக இலங்கை சென்றிருந்தார்.
செயின்ட் செபஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்த ஒரு பள்ளி மாணவனைப் பற்றி விசாரிப்பதற்காக, நெகோம்போ நகரத்திலுள்ள சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றுள்ளார் அந்த ஊடகவியலாளர்.
ஆனால், அந்த நேரத்தில் பள்ளியிலிருந்த பலியான மாணவரின் பெற்றோர், காவல்துறைக்கு தகவல் கொடுத்து ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பள்ளியில் அத்துமீறி நுழைய முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 15ம் தேதி வரை, இவரைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.