டில்லி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசின் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆண்ட போதும் பாஜக ஆண்ட போதும் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன.   இதற்கான நடவடிக்கைகள் இரு ஆட்சியிலும் எடுக்கப்பட்டு வருகின்றன.    தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் பாஜக ராணுவ நடவடிக்கைகள் குறித்து அதிகம் பேசி வருவது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியின் முதல் பாகம் பின் வருமாறு :

கே:  தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரவாத தாக்குதல்களுக்கு உடனடியாக பதிலடி அளிக்கிறார் என புகழப்பட்டு வருகிறார்.  புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு அவர் பதிலடி அளித்துள்ளார்.   அதே நேரத்தில் காங்கிரஸார் வங்கதேச அமைப்பில் இந்திரா காந்தி பெரும் பங்கு வசித்தது குறித்து கூறுகின்றனர்.  இதில் உங்கள் கருத்து என்ன?

ப :  தேசிய பாதுகாப்பில் எந்த ஒரு சமரசமும் செய்துக் கொள்ள முடியாது   புல்வாமாவில்  தேசிய நெடுஞ்சாலையில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்தனர்.   இது தேசிய பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி ஆகும்.   நீண்ட நாட்களாக பாதுகாப்பு கருதி வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்ல வேண்டும் என்னும் கோரிக்கை இருந்து வருகிறது.   ஆனால் மோடி அரசு அந்த கோரிக்கையை மறுத்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக காஷ்மீர் காவல்துறைக்கு வந்த உளவுத்துறை தகவல்களை அரசு அலட்சியம் செய்துள்ளது.   அது மட்டுமின்றி தீவிரவாதியின் எச்சரிக்கை வீடியோவையும் கண்டு கொள்ளவில்லை.    கடந்த ஐந்து ஆண்டுகளாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் உள்ள பாம்பூர், உரி, பாலன்கோடி, குர்தாஸ்பூர், சஞ்வான் ஆகிய ராணுவ முகாம்களின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

காஷ்மீரில் கடந்த ஐந்து வருடங்களாகவே உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் சீர் குலைந்துள்ளது.   இதற்கு பாஜக – பிடிபி கூட்டணி ஆட்சி பாகிஸ்தானை கவனிக்காமல் விட்டதே காரணமாகும்.

ஒவ்வொரு அச்சுறத்திலின் போதும் ராணுவத்தினருக்கு பதில் தாக்குதல் நடத்த முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.    எங்கள் ஆட்சியிலும் பல முறை சர்ஜிகல் ஸ்டிரைக்குகள் நனதன.   எங்களை பொறுத்தவரை ராணுவ நடவடிக்கைகள் என்பது இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்குவது மட்டும் தானே தவிர வாக்கு சேகரிப்புக்கானது இல்லை.    கடந்த 70 வருடங்களில் நடந்த எந்த ஒரு ராணுவ நடவடிக்கைகளையும் அரசு மறைத்தது இல்லை.   அதே நேரத்தில் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடியதும் இல்லை.   அது ஒரு அவமானகரமான செயல் ஆகும்

இப்போது இதை பாஜக வெளியில் சொல்வதன் காரணம் மோடி அரசின் பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பை உருவாக்காமை, கிராமப்புற மற்றும் விவசாயிகளின் துயரத்தை கவனிக்காமை உள்ளிட்டவைகளை மக்கள் மனதில் இருந்து மாற்றவே ஆகும்.

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நடத்திய 1965 ஆம் வருடப் போர் மற்றும் இந்திரா காந்தியின் வங்க தேச உருவாக்கப் போர் ஆகியவை மிகவும் முக்கியமானதாகும்.   இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் வெளியில் தெரிவிக்கப்பட்டது.     அவர்கள் இருவருடைய தலைமைப் பண்பையும் பெருந்தன்மையையும் இப்போதுள்ள அரசியல் தலைவர்களிடம் எதிர்பார்க்க  முடியாது.   இவர்களுடைய போர் நடவடிக்கைகள் உலக நாடுகள் அமைப்பையே மாற்றி அமைத்தவை ஆகும்.    இந்த போர்களின் வெற்றியை இந்திரா காந்தி அல்லது அவருக்கு பின் வந்தவர்கள் யாரும் தங்கள் பெருமையாக தேர்தல் நேரத்தில் கூறிக் கொள்ளவில்லை.

கே : மும்பையில் நடந்த 26/11 தாக்குதலுக்கு உங்கள் அரசு சரியான பதிலடி அளிக்கவில்லை என மோடி ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.   நீங்கள் இந்த தாக்குதலுக்கு பதிலாக என்ன செய்தீர்கள்?

ப :  உண்மை குறித்து எதுவும் தெரியாத நிலையில் யாரும் சரித்திரத்தை மாற்ற முயலலாம்.  நாங்கள் எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்வதை நான் மறுக்கிறேன்.   ஆனால் ஒவ்வொரு பதிலடிக்கும் பின்னால் ஒவ்வொரு அரசியல் சூழ்நிலை உள்ளது.   நாங்கள் பாகிஸ்தானுடைய தீவிரவாத தொடர்புகளை உலகுக்கு எடுத்துக் காட்ட தேவையான பதில் நடவடிக்கைகளை எடுத்தோம்.   அத்துடன் தீவிரவாத இயக்கங்களுக்கு பொருளாதார நெருக்கடியை அளித்து அவர்கள் இயக்கத்தை நிறுத்தினோம்.

இதை நாங்க:ள் மும்பை தக்குதல் நடத்திய 14 நாட்களில் நடத்திக் காட்டினோம்.   ஹஃபீஸ் சையதை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்க சீனாவின் ஒப்புதலை பெற்றோம்.     அது மட்டுமின்றி இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க பொருளாதார தடை விதிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்தோம்.   இந்த தாக்குதலுக்கு வடிவமைத்த டேவிட் ஹாட்லிக்கு காங்கிரஸ் அரசு கடந்த 2013 ஆம் வருடம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது.   ஐநா சபை காங்கிரஸ் அரசின் வற்புறுத்தலால் மும்பை தாக்குதல் தொடர்பான லஷ்கர் ஈ தொய்பா உறுபினர்களை பயங்கரவாதிகளாக அறிவித்டது.    இதனால் அந்த இயக்கம் அடக்கப்பட்டது.

இவ்வாறு லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தை ஒடுக்குவதில் சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட நாடுகளையும் இணைய வைத்தோம்.   இந்த தாக்குதலுக்கு தொடர்புள்ள ஷேக் அப்துல் க்வாஜா கொழும்புவில் கைது செய்யப்பட்டு ஜனவரி 2010ல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.   சைபுதின் அன்சாரி சௌதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு 2012 ஆம் வருடம் ஜுன் மாதம் டில்லியில் கைது செய்யப்பட்டார்.

மும்பை தாக்குதலை தொடர்ந்து காங்கிரஸ் அரசு தேசிய தீவிர வாத தடுப்பு மையம் அமைக்க கடலோரப் பகுதி காவலை அதிகரித்தது.   அப்போதைய குஜராத் முதல்வர் மோடி இதை எதிர்த்தார்.  அது மட்டுமின்றி உள்துறை பாதுகாப்பாபொபுக்காக அனைத்து மாநில உளவுத் துறைகளையும் இணைக்க நாங்கள் எடுத்த முயற்சியையும் மோடி அரசு ஒப்புக் கொள்ளாமல் எங்கள் முயற்சியை தடுத்து நிறுத்தியது.

 

இந்த பேட்டியின் அடுத்த பகுதி விரைவில்….