ஐதராபாத்
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி இன்று மரணம் அடைந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் டாக்டர் சுபாஷன் ரெட்டி. இவர் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியும் வகித்தவர் ஆவார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கை விசாரித்தவர் ஆவார்.
இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஐதராபாத் நகரில் வசித்து வருகிறார். இன்று சென்னை பார் அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் இன்று காலை மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் “முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி ஐதராபாத் நகரில் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு ஐதராபாத் நகர் மகாபிரஸ்தானம் திரைப்பட நகரில் உள்ள அவர் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு. நடைபெற உள்ளது” என தெரிவிக்கப் பட்டுள்ளது.