லக்னோ:

ராகுல்காந்தி குடியுரிமை பற்றிய சர்ச்சை அபத்தமானது, இது மக்களுக்கு தெரியும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக மீது கடுமையாக சாடினார்.

ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் பீடுநடை போட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை பொறுத்துக்கொள்ளாத  பாஜகவினர் அதை தடுக்கும் வகையில், அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுக்களை ராகுல் மீது சுமத்தி தொல்லை கொடுத்து வருகின்ற னர். சமீபத்தில், அவரது குடியுரிமை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி புகார் கொடுத்து பிரச்சனை ஏற்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக  தீவிர அரசியலில் களம் புகுந்துள்ள பிரியங்கா காந்தி நாடு முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக  சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பாஜக தோல்வி பீதியில் புலம்பி வருகிறது.

இந்த நிலையில், ராகுல்காந்தியின் குடியுரிமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து பிரியங்கா காந்தி ஆவேசமாக பதில் அளித்தார்.

ராகுல்காந்தி இந்தியர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் என்றவர், தேவையின்றி, அவரது குடியுரிமை குறித்து சர்சைசைகளை உருவாக்கி வருகின்றனர், இதுபோன்ற ஒரு கெட்ட கோரிக்கையை எப்போதும் கேட்கவில்லை, இது அபத்தமான நாடகம் என்று கூறிய பிரியங்கா, ராகுல் இந்தியாவில் தான் பிறந்து, வளர்ந்ததாகவும் தெளிவுபடுத்தினார்.

மேலும், மோடிக்கு எதிராக போட்டியிடாதது குறித்து பிரியங்கா காந்தி விளக்கமளித்தவர், அனைத்து மூத்த தலைவர்களின் அறிவுரைகளையும் தான் எடுத்துக்கொண்டதாகவும், தான் ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த கூடாது, கிழக்கு உ.பியில் உள்ள 41 தொகுதிகளையும் கவனிக்க வேண்டும் என்று அவர்கள் கருதியதால் தான் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என்று கூறினார்.  தான் ஒரு தொகுதியில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால், அனைத்து வேட்பாளர்களும் ஏமாற்றமடையக்கூடும் .

இவ்வாறு பிரியங்கா கூறினார்.