டில்லி:

பிரபல லாட்டரி அதிபரான மார்ட்டினுக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வீடுகள், அலுவலகங்கள்,  நிறுவனங்கள் உள்ளன. அங்கு இன்று  வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் லாட்டரி விற்பனையின் மெயின் முகவராக செயல்பட்டு வந்தவர் மார்ட்டின்.  தற்போது தமிழகம் உள்பட சில மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில்,  மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மார்டின் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தி வருகிறார்.

இந்த  மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில், சென்னையில் 10 இடங்கள், கோவையில் 22 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும்,  ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி ஆகிய நகரங்களிலும் மார்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கொல்கத்தா விமான நிலையம் வந்த மார்டினை மடக்கிய வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]