மும்பை:

பிரதமர் மோடியை விமர்சித்து மகராஷ்டிரா நவநிர்மாண்  சேனா (MNS) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கார்ட்டூன் வெளியிட்டுள்ளார்.

அதில், மோடியின் ஆட்சியில், நெய்யப்பட்ட துணி மீண்டும் நூலாக மாறி வரும் அவலத்தை சுட்டிக்காட்டி, ராட்டையில் மோடி நூல் நூற்கும் காட்சியுடன்  கடுமையாக விமர்சித்து கார்டூன் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக நூல்களைக்கொண்டே துணி நெய்யப்படும். ஆனால், ராஜ்தாக்கரே தனது கார்ட்டூனில், நெய்த துணியில் இருந்து ராட்டை உதவியுடன் நூலை பிரித்தெடுப்பது போல வரையப்பட்டு உள்ளது.

மோடியின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், நாடு முழுவதும் வேலைவாய்ப்பு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் சொல்லொனா துயரத்தை சந்தித்துள்ளனர். மோடியின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் கொதித்தெழுந்துள்ள நிலையில், மகராஷ்டிரா நவநிர்மாண்   சேனாவும் மோடியை கடுமையான விமர்சித்து வருகிறது.

ஏற்கனவே  பிரதமர் நரேந்திர மோடி வேறு யாருமல்ல, அவர் மற்றொரு ஹிட்லர்” என்று நவநிர்மாண் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சித்த நிலையில், நாட்டின் இரண்டு அபாயங்களில் ஒன்று பிரதமர் மோடி, மற்றொருன்று பாஜக தலைவர் அமித்ஷா என்றும்  சாடியிருந்தார்.

அதை சுட்டிக்காட்டியே, தற்போது ராஜ்தாக்கரே கார்ட்டூன் வரைந்துள்ளார். அந்த கார்ட்டூனில், ஏழை மக்கள் உடுத்தியுள்ள துணியில் இருந்து ராட்டை உதவியுடன் நூலாக பிரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. மோடியின் பின்னணியில் அமித்ஷா இருக்கும் காட்சியும் தெளிவு படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மோடியின் ஆட்சியில்  நாட்டின் மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி உள்ளதையும், இன்னும் அவரிடம் ஆட்சியை கொடுத்தால், மக்களின் துணியை உருவி அவர்களை நிர்வாணமாக அலைய விடும் நிலையை உருவாக்கி விடுவார் என்ற வகையில்  அருமையாக கார்டூரை வரைந்துள்ளார் ராஜ்தாக்கரே.

இந்த கார்ட்டூன் வைரலாகி வருகிறது.