புதுடெல்லி:

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் திராவிட் விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னாள் இந்திய அணி கேப்டன் ராகுல் திராவிட், இந்திய ஏ அணி மற்றும் யூ-19 டீமின் பொறுப்பாளராக இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த பதவிக்கு விண்ணப்பங்கள் பெற்று, தகுதியானவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என புதுடெல்லியில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்த்திரி மீண்டும் விண்ணப்பிப்பார் என்று தெரிகிறது.

ராகுல் திராவிட் இந்த பதவிக்கு தகுதியானவர்களில் முன் வரிசையில் இருப்பதாகத் தெரிகிறது.
தேசிய ஜுனியர் கிரிக்கெட் டீமிலும் இவர் பணியாற்றியிருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது.

எனவே, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் திராவிட் விண்ணப்பிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வாய்ப்புகளும் அவருக்கு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.