டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சினிமா உலக பிரபலங்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள் போன்ற பல பிரபலங்கள் தேசிய கட்சிகளின் இணைந்து, தேர்தலில் போட்டி யிடும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில்,  பிரபல இந்தி பாடகர் தலேர் மெஹந்தி  பாஜகவில் இணைந்துள்ளார். அவரும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது இந்தி பட  பாப் பாடகரான தலேர் மெஹந்தியும் பாஜகவில் இணைந்துள்ளார்.

தலேர் மெஹந்தி  கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில்  காங்கிரஸ் கட்சியில்இணைந்தார். அதைத்தொடர்ந்து அரசியலில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தவர், தற்போது, பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.