இந்தூர்: பாரதீய ஜனதா கட்சியின் போபால் தொகுதி வேட்பாளராக பிரக்யா தாகூர் தேர்வு செய்யப்பட்டது அத்தொகுதி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியின் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களையடுத்து இந்த அதிருப்திகள் எழுந்துள்ளன.
பிரக்யாவின் தேர்தல் பிரச்சார திட்டமிடல் தொடர்பாக கூட்டப்பட்ட கூட்டத்தில், வெறும் 30% நிர்வாகிகளே கலந்துகொண்ட நிகழ்வானது, அதிருப்தியை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது.
கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிர்வாகிகளுக்கு கட்சி சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி, இந்த நெருக்கடியான தேர்தலில் வெற்றியை தேடித் தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பிரக்யா தாகூர் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டுமென கட்சி சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகளிடம் கூறப்பட்டுள்ளது. போபால் தொகுதியின் டம்மி வேட்பாளராக தற்போதைய உறுப்பினர் அலோக் சஞ்சார் மனுதாக்கல் செய்துள்ளார்.