டில்லி:
நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (29ந்தேதி) நடைபெற உள்ளதால், இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வுபெறுகிறது.
17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்த நிலையில், 4வது கட்ட வாக்குப்பதிவு 29ம் தேதி நடைபெறுகிறது.
4வது கட்ட தேர்தல் பீகார், ஜம்முகாஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஆகிய 9 மாநிலங்களில் உள்ள 71 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் 945 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் ஒரு லட்சம் 40 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 4வது கட்ட தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.
நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.