புதுடெல்லி: சில பெரிய வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், தாங்கள் பெற்ற வரிவிலக்கு பலன்களை, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை என இந்திய வரிவிதிப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது; அமெரிக்காவின் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமான ப்ராக்டர் & கேம்பிள், தனக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை தொகையான $35 மில்லியன் தொகையை, வாடிக்கையாளர்களுக்கு கொண்டுசேர்க்கவில்லை. பழைய விலையிலேதான் பொருட்கள் விற்கப்படுகின்றன.
இதுதவிர, தனிப்பட்ட முறையில், தென்கொரியாவின் சாம்சங் மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் போன்ற நிறுவனங்களில் விசாரணை மேற்கொண்டபோது, அவை, தாங்கள் விதிகளை சரியான முறையில் பின்பற்றி வருவதாகவே கூறின.
சாம்சங் நிறுவனம் தரப்பில், ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு ஏற்ற வகையில், தங்களுடைய பொருட்களின் விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.