புதுடெல்லி: நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நபர்களுக்கான காவல்காரராக இருப்பதிலேயே தனது ஆட்சிக் காலத்தை அர்ப்பணித்துள்ளார் பிரதமர் மோடி என்று விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, “ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவது மற்றும் ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பலவிமான ஜம்ப வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த மோடி, குறிப்பிட்ட 15 பேரின் நலன்களைக் காப்பதில்தான் தனது ஆட்சிகாலத்தை செலவிட்டார்.
ரஃபேல் தொடர்பாக நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அரசோ இதை மறுக்கிறது. முன்பின் அனுபவமே இல்லாத அணில் அம்பானிக்கு ரூ.30,000 கோடி மதிப்பிலான விமானத்துறை ஒப்பந்தம் தரப்படுகிறது.
ஆனால், கரும்பு விவசாயிகள் தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையைக் கேட்டால், கரும்பு சாகுபடியால்தான் நாட்டில் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது என்ற வியாக்யானம் பேசப்படுகிறது” என்றார்.