இந்தியா இந்தோனேசியா இடையேயான உறவை கவுரவப்படுத்தும் நோக்கில்,ராமாயணம் காட்சி தொடர்பான தபால் தலை வெளியிட்டுள்ளது இந்தோனேசிய அரசு.
இந்தியா- இந்தோனோஷியா இடையே கடந்த 1949-ம் ஆண்டு முதல் நட்பு நீடித்து வருகிறது. இதன் 70-ம் ஆண்டையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட இந்தோனேஷிய அரசு முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி இந்தோனேஷியா சென்றிருந்தபோது அவரிடம் பேசி இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, இந்தோனேஷியா அரசு, இந்திய நாட்டின் சிறப்புமிக்க இதிகாசமான ராமாயணத்தின் காட்சியை விளக்கும் சிறப்பு தபால்தலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற எளிய விழாவில் இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், இந்தோனேஷிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அப்தூர்ரஹ்மான் முகமது பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த தபால் தலையை இந்தோனேஷியாவின் பாபக் நெயோமன் நூரத் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.