டில்லி

தாம் குஜராத் முதல்வராகும் வரை தனது துணிகளை தாமே தோய்த்ததாக மோடி ஒரு பேட்டியில் கூறியது பொய் என தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடியை பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் மோடி தனது இள வயது வாழ்க்கை குறித்து அக்சய் குமாரிடம் விவரித்துள்ளார். அக்சய் குமார் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனவர் ஆகும். சமீபத்தில் வெளிவந்த 2.0 என்னும் படத்தில் ரஜினிகாந்துடன் பறவை ஆர்வலர் வில்லனாக நடித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது பேட்டியில் ”இளமையில் நான் மிகவும் வறுமையில் இருந்தேன். ஆயினும் ஒரு நாள் கூட அழுக்கு துணிகளை அணிந்தது இல்லை. எனது துணிகளை நானே தோய்த்துக் கொள்வேன். அதனால்தான் நான் அரைக்கை சட்டைகளை மட்டுமே அணிவேன். முழுக்கை சட்டையை விட அரைக்கை சட்டையை தோய்ப்பது எளிதாகும்.

அது மட்டுமின்றி எனது வறுமையால் நான் பல சமயம் கொஞ்சம் தாழ்மை உணர்வுடன் இருந்தேன். அதை மாற்ற நான் பாத்திரத்தில் கரித் தணலை போட்டு இஸ்திரி செய்துக் கொள்வேன். என்னிடம் அப்போது இஸ்திரி பெட்டி வாங்க வசதி இல்லை. இவ்வாறு எனது துணிகளை நானே தோய்க்கும் பழக்கத்தை நான் குஜராத் முதல்வராகும் வரை கடைபிடித்தேன்” எனக் கூறினார்.

இந்த தகவல் தவறானது என பல நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது 2017 ஆம் வருடம் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் கோத்ராவை சேர்ந்த சந்த் முகமது தோபி என்பவர் கடந்த 1970ல் இருந்து மோடியின் சலவையாளியாக பணி புரிந்தததாக குறிப்பிட்டிருந்தது. சந்த் முகமது கோபி என்னும் இந்த சலைவை தொழிலாளி ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் எனவும் செய்தியில் உள்ளது.

மேலும் அந்த பத்திரிகை செய்தியில், ”கடந்த 2008 ஆம் வருடம் சந்த் இதய நோயால் அவதிப்பட்ட போது மோடி அவருக்கு ஒரு பொதுக்கூட்டத்தில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அளித்துள்ளார். ஆனால் அதை வாங்க மறுத்த சந்த் அதற்கு பதிலாக தமக்கு நிலம் அளிக்குமாறு கேட்டுக் கொடுள்ளார். அதை உடனடியாக ஒப்புக் கொட மோடி அந்த மேடையிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

சந்த் முகமது தோபி கடந்த 2008 ஆம் வருடம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்த செய்தியை பகிர்ந்துள்ள நெட்டிசன் கவுரவ் பாந்தி, “மோடி அக்சய் குமாரிடம் தனது துணிகளை தாமே 2001 ஆம் வருடம் குஜராத் முதல்வர் ஆகும் வரை தோய்த்துக் கொண்டதாக கூறி உள்ளார். ஆனால் அத/ற்கு சில வருடங்கள் முன்பு 1970 வரை தனது துணிகளை துவைத்த சலவை தொழிலாளிக்கு பரிசளித்துள்ளார். பொய்யர் நம்பர் 1” என பதிந்துள்ளார்